போன் பே நிறுவனமானது போன் பே மூலமாக சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்பவர்களுக்கு சிலிண்டர்களை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலமாக ஒரு மணி நேரத்தில் இலவச சிலிண்டர் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் போன் பேச பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அந்த பயனர்களுக்கு தற்போது பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது போன் பே பயன்படுத்தி சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்களை வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.  இந்தியா மிக வேகமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது/ சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் யூபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. பலர் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் நிதி பரிவர்த்தனையை செய்வதற்கு இந்த செயலியை  பயன்படுத்தி வருகிறார்கள் .இதன் மூலமாக பண பரிவர்த்தனை செய்தால் கேஷ்பேக் மற்றும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும். ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு அற்புதமான சலுகையை  அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது போன் பே செயலி மூலம் புக் செய்தால் இலவசமாக சமையல் சிலிண்டர் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் சிலிண்டர்க்கு பணம் செலுத்தி வழக்கம் போல முன்பதிவு செய்ய வேண்டும். இந்த இலவச சிலிண்டர் சலுகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் பணம் திரும்ப பெறப்பட்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.