இறைச்சி சாப்பிட்டால் இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்ட ஐஐடி இயக்குனர் லக்ஷ்மிதார் பெஹெரா தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய அவர், ஹிமாச்சலப் பிரதேசத்தில் மக்கள் இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கை பேரிடர்களான  மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு போன்றவை  இங்கே  அடிக்கடி நிகழ்கின்றன. இறைச்சியை  உண்பவர்கள் நல்ல மனிதர்களே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர் அங்குள்ள மாணவர்களை “நான் இறைச்சி சாப்பிட மாட்டேன்” என உறுதிமொழி எடுக்க கூறியுள்ளார்.