தெலுங்கானா மாநிலம் பஹ்தாத்ரி கொத்தகுடேம்  மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை டோலியில்  சுமந்தபடி சென்றுள்ளனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி எதுவும் இல்லாததால் அந்த பெண்ணை  டோலியில்  படுக்க வைத்து அதை சுமந்தபடி காட்டு வழியாக சென்றுள்ளனர்.

இந்த காட்சி ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 20 கிலோமீட்டர் தொலைவு நடந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆம்புலன்ஸில் பத்ராசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் பிரசவ வலியால் துடித்த பெண் 20 கிலோமீட்டர் தோளில் சுமந்து கால்நடையாக நடந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.