லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் சூட்டிங் பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் சூட்டிங் இன்னும் 5-6 நாட்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும் சென்னை மற்றும் தலக்கோணத்தில் சிறுசிறு படப்பிடிப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்த பிறகு, விஜய் ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தளபதி-68 படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் தொடங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.