கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு பகுதியில் சாலையோரம் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

மேலும் அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.