உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள தானா முசோரி பகுதியில் ஒரு துயரமான சம்பவம் வெளியாகியுள்ளது. பூரே என்ற கால்நடை வளர்ப்பாளர், தனது இரண்டு எருமைகளை வழக்கம்போல அழைத்துச் சென்றபோது, அவற்றில் ஒன்றை மின் கம்பம் திடீரென தாக்கியது. அந்த மின் கம்பத்தில் இருந்து வெளிவந்த மின்சாரம், எருமையை நேரடியாக தாக்கியதிலிருந்து அது உயிரிழந்தது. இந்த முழு சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#Ghaziabad के मसूरी इलाके में बिजली के लंबे पर प्लास्टिक से कव किया गया है लेकिन बावजूद उसके भी लंबी के पास से निकल रही भैंस को करंट ने अपनी चपेट में ले लिया जिससे उसकी मौके पर मौत हो गई। ये खंभा किसी की जान ले सकता है। @UPPCLLKO pic.twitter.com/1j6BqQgVU2
— Lokesh Rai (@lokeshRlive) July 11, 2025
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மின்வாரியத்தின் அலட்சியத்துக்கு எதிராக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த மின் கம்பத்திற்கு மின்சாரம் செல்லாதவாறு பாலிதீன் கம்பியில் கட்டப்பட்டிருந்தாலும், அது எந்தவித பாதுகாப்பையும் வழங்காதது போல உள்ளது. இது போன்ற கவனக்குறைவான நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் மிருகங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றன என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் போன்று மற்ற இடங்களிலும் நடக்கக்கூடியது என்பதால், மின்வாரியம் உடனடியாக சரிபார்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
