சமீபகாலமாக கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், குடும்ப உறவுகள் சீரழிந்து வருவதும், அதனால் ஏற்படும் வன்முறைகள் கூடுதலாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஓயோ ரூம்கள், இளைஞர்கள் மற்றும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, ஓயோ ரூம்கள் தொடர்பான பாதுகாப்பு விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இருப்பினும், இவை குறைந்த வாடகை, தனியுரிமை, சுலபமான பதிவு ஆகிய காரணங்களால் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு திருமணமான பெண், தனது கள்ளக்காதலனின் பிறந்தநாளை கொண்டாட ஓயோ ஹோட்டல் அறையில் அவருடன் நேரம் கழித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிறகு, இருவரும் உல்லாசமாக இருந்த வேளையில், அப்பெண்ணின் கணவர் தனது இரு குழந்தைகளுடன் அங்கு வந்துள்ளார். திடீரென கணவரை பார்த்ததும், போதையிலும், அறைகுறை ஆடையுடன் இருந்த அந்த பெண், ஹோட்டல் அறை சுவரில் ஏறி கீழே குதித்து ஓடியுள்ளார். அவரது தப்பிச்சென்ற காட்சிகள், சிசிடிவி மற்றும் பிற பயணிகளால் எடுத்த வீடியோக்களாக தற்போது வைரலாக பரவி வருகிறது.
मेरठ से एक अजीबोगरीब मामला सामने आया है।
शादीशुदा महिला अपने प्रेमी के साथ OYO मे जन्मदिन मना रही थी तभी इसका पति बच्चों को लेकर होटल मे पहुंच जाता है। फिर क्या हुआ आप स्वयं देख लीजिए।
जिस किसी वर्ग को हद से अधिक संरक्षण प्राप्त हो जाता है वह ऐसे ही नंगई पर उतर आता है। pic.twitter.com/hypZPJhLX8
— Dr. Sheetal yadav (@Sheetal2242) July 10, 2025
இந்த சம்பவம், ஓயோ அறைகள் தவறாக பயன்படுத்தப்படும் வண்ணம் எப்படி சமூகத்தில் பல்வேறு கலாசார சிக்கல்களை உருவாக்குகிறது என்பதை வெளிக்கொணர்ந்துள்ளது. மேலும், குற்றச்செயல்களில் ஈடுபடும் சிலரால், இந்த வகை ஹோட்டல்கள் குடும்ப நட்புறவுகளையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும் விதமாக நடந்து வருகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம், சமூக ஒழுங்கு மற்றும் குடும்ப ஒற்றுமையின் மீது கேள்விக்குறிகளை எழுப்பும் வகையில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
