சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகுதான் இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். தாய்மொழியான தமிழையும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் ஏற்றுக் கொண்டது தமிழ்நாடு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. புதிய கல்விக் கொள்கை மூலமாக மூன்றாவது மொழியை படிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்ட நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு அரசு வேண்டாம் என்றால் இரு மொழி கொள்கையே போதும் என்று சொல்லி அரசியல் ஆக்காமல் இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாக தான் உள்ளனர்.

பெரும்பாலான அரசியல் இயக்கங்களும் ஆதரவாக உள்ளது. ஆனால் அதை விட்டுவிட்டு எனக்கு பத்தாயிரம் கோடி வேண்டாம் என்று சிவாஜி கணேசனை போல் ஸ்டாலின் வசனம் பேசுகின்றார். இந்த ஆட்சியாளர்கள் மீது உள்ள மக்களின் கோபத்தை மடைமாற்றும் விதமாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்தி திணிப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் இரு மொழி கொள்கை தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எதுவும் சரியில்லை. போதைப் பொருள் நடமாட்டமும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டது. கூலிப்படைகளால் உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லை என்று  டிடிவி தினகரன் பேசியுள்ளார்.