திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு இழுப்பறி நீடிக்கும் நிலையில் , அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. புரட்சி பாரதம், புரட்சித் தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இவர்களின் வாக்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.