கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் வெறும் இயந்திரங்களாகவே பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றாக, ‘ரெடிட்’ (Reddit) தளத்தில் ஒரு Gen-Z ஊழியர் பகிர்ந்துள்ள பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த ஊழியர் தனது நிறுவனத்திலிருந்து விலகுவதாக அறிவித்து, தற்போது நோட்டீஸ் பீரியடில் இருந்து வருகிறார். மாதத்தின் இறுதி என்பதால் வேலைப்பளு அதிகமாக இருந்துள்ளது. அவருக்குப் பதிலாக மற்றொரு ஊழியரை நியமிக்குமாறு அவர் பலமுறை கோரிக்கை விடுத்தும், நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது பற்றி முக்கியமான வேலைகள் அனைத்தும் என் தலையிலேயே சுமத்தப்பட்டன. வேலையை முடிக்க நள்ளிரவு 1 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என அவர் பதிவிட்டுள்ளார்.  அதிக நேரம் வேலை செய்ததற்காக ‘ஓவர்டைம்’ படி கேட்டபோது, நிறுவனம் அளித்த பதில் அவரை உறைய வைத்துள்ளது. “நாங்கள் உங்களை நீண்ட நேரம் வேலை செய்யச் சொல்லவில்லையே” என நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆனால், கொடுத்த வேலையை முடிக்காமல் எப்படி வீட்டுக்குச் செல்ல முடியும் என அந்த ஊழியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அனுபவத்தின் மூலம் அவர் கற்றுக் கொண்ட மூன்று முக்கிய பாடங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அலுவலகத்தில் உங்களை ஒருபோதும் முக்கியமானவர் (V.I.P) என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் வெளியேறிய மறுநிமிடமே உங்களை மாற்ற ஆள் வந்துவிடுவார்கள். வேலையை நேசியுங்கள், ஆனால் ஒருபோதும் நிறுவனத்தை (Company) நேசிக்காதீர்கள். நிறுவனத்திற்கு நீங்கள் வெறும் ஒரு ‘ரிசோர்ஸ்’ (Resource) மட்டுமே என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் தங்களது அனுபவங்களைப் பகிரத் தொடங்கினர். நான் ஃப்ரெஷ்ஷராக இருந்தபோது தொடர்ந்து 20 மணிநேரம் வேலை செய்தேன். இது கடின உழைப்பு அல்ல, சுரண்டல்,” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். நோட்டீஸ் பீரியடில் இவ்வளவு உழைக்க வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் உடல்நலனை நிறுவனம் கவனிக்கப் போவதில்லை, நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என மற்றொருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

"GenZ doesn't work" it's 1AM and I'm still in office. The entire floor is empty.
byu/Simply_Param inIndianWorkplace