ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பிய இரண்டு பழங்குடியின சிறுமிகளை ஒரு கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிடி மாவட்டம்  ஹர்லடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் கிராமத்தில் நடந்த திருவிழாவைப் பார்த்துவிட்டு, ஒரு சிறுவனுடன் இரவு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது
அப்போது, சுமார் 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.

அந்த கும்பல் சிறுமிகளுக்குப் பாதுகாப்பாக வந்த சிறுவனை மிரட்டி அங்கிருந்து துரத்திவிட்டு, இரண்டு சிறுமிகளையும் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது. சிறுமிகளை அருகிலுள்ள ஆள்நடமாட்டமற்ற விளைநிலத்திற்கு இழுத்துச் சென்ற அந்த கும்பல், அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யக் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.