விழுப்புரம் மாவட்டம் தேவனூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த 7-ஆம் தேதி நடராஜன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகை, 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மறுநாள் காலை கண்விழித்த நடராஜன் நகைகளும் பணமும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், கிஷோர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.