கர்நாடக மாநிலம் நாவூருக்கு அருகே உள்ள முரா பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அப்துல் சலீமின் ஆறு வயது மகன் ஷாஜின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பந்த்வால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், விபத்தில் காயமடைந்த அப்துல் சலீம், அவரது மனைவி மற்றும் அவர்களது மற்ற இரண்டு குழந்தைகள் தற்போது மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.