தென்மேற்கு ரயில்வேயில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக ஜான்சி ராணி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதை இரண்டாவது மனைவி எனவும், கணவரின் குடும்பம் ஓய்வூதியத்தில் இருந்து 50% வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது நீதிபதி எம். நாகப்பிரசனா என்பவர் முன் விசாரணைக்கு வந்த நிலையில் ரயில் சேவைகள் திருத்த விதிகள் 2016 அடிப்படையில் இறந்த ரயிலில் ஊழியரின் குடும்ப ஓய்வூதியத்தில் 50% அவருடைய இரண்டாவது மனைவிக்கு வழங்க வேண்டும் என்று இருப்பதாக கூறினார்.

மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட விதவைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் எனவும் குறிப்பிட்டார். அதேபோல அதில் ஒருவர் உயிரிழந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என்ற விதி இருப்பதால் இந்த ரயில்வே ஊழியர்களின் ஓய்வூதியத்தில் இரண்டாவது மனைவிக்கு 50% தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.