அரபிக்கடலில் எம்வி செம் ப்ளூட்டோ என்ற வணிக கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கச்சா எண்ணெய் கப்பல் நீதான ட்ரோன் தாக்குதலை அடித்து கடற்படை போர் கப்பல்கள் விரைந்துள்ளன. சவுதியில் இருந்து மங்களூருக்கு புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  கச்சா எண்ணெய்  ஏற்றி வந்த எம் வி செம் சென்ற கப்பல் மீது நடந்த தாக்குதலில் கப்பல் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் இந்திய கடல் எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தல் துறைமுகத்தில் இருந்து 217 கடல் மைல்களுக்கு உள்ளே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே தான் இந்திய கடலோர காவல் படை கப்பலான ஐசிஜிஎஸ் விக்ரம் அங்கு விரைந்துள்ளது. சம்பவம் என்னவென்றால் செம் ப்ளூட்டோ என்று அழைக்கப்படும் கப்பல் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணையை சுமந்து கொண்டு மங்களூர் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான கப்பல் இது.

இந்த கப்பல் மீது தாக்குதல் நடைபெற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ட்ரான் தாக்குதலை நடத்தியது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது. சவுதி தீவிரவாதிகள் இந்த பகுதியில் பல கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் நடத்தி இருக்கலாம் அல்லது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கப்பலை மீட்க பிற இந்திய கப்பல்களுக்கு இந்த கப்பல் படையை சேர்ந்த கப்பல்களுக்கும் கடலோர காவல்படை அழைப்பு விடுத்துள்ளது.

இந்த கப்பலில்  20 இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்திருந்த கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே இந்த தாக்குதல் இந்தியாவுக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கப்பல் பாதிப்படைந்துள்ளது.

அதில் உள்ள 20 இந்தியர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும். இந்த தாக்குதலை நடத்தியது யார்? இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்த காரணம் என்ன? இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனவே விரைவில் இந்த தாக்குதல் நடத்தியது யார்? என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படை கப்பல்கள் முற்படலாம்..

https://twitter.com/Ramy_Sawma/status/1738477530225455480