கைம்பெண் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது. எதிர்பாராத விதமாக கணவர் இறந்து விட்டால் பெண்கள் முடங்கி விடாமல் மறுமணம் செய்து கொண்டு உறுதியோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.