தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் ஸ்டீபன். இவர் கடந்த 2022 -ஆம் ஆண்டு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய செல்வ பிரபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஆரோக்கிய பிரபா மீண்டும் கருவுற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 18-ஆம் தேதி நெல்லை மாவட்டம் திசையன்விளையை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கருக்கலைப்பு செய்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று வீட்டில் இருந்த செல்வ பிரபாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமானதால் உடனடியாக அவரை சாத்தான்குளம் மருத்துவமனைக்கு சிகிச்சையாக கொண்டு சென்றனர்.
அங்கு செல்வ பிரபாவை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
