உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், புனிதமான கணவன் – மனைவி உறவையே கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கணவரை இழந்த ஒரு பெண், தன்னை அரசு ஊழியர் என்று பொய் சொல்லி அறிமுகமான ஒருவரை நம்பி கடந்த நவம்பர் மாதம் மறுமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகமாகும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி இரவு, அந்தப் பெண்ணின் கணவன் தனது நண்பரான அந்த அரசு அதிகாரி சேர்ந்து மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளனர். மயக்கமடைந்த பெண்ணை அந்த அரசு அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த பெண் இதைக் கண்டித்தபோது, அவரைக் காக்க வேண்டிய கணவனே, “வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி, அடித்து வீட்டை விட்டுத் துரத்தியுள்ளார்.
தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அந்த நயவஞ்சக கணவனையும், அவரது நண்பரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
