தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK) தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று (மார்ச் 27) அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், பல்லாவரம் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
அதன்படி, பல்லாவரம் தொகுதியில் வெங்கடேசனும், குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகனும் போட்டியிட உள்ளனர். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவரும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே களம் காணப்போவதாகப் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஐஜேகே, இப்போது வேட்பாளர் அறிவிப்பிலும் வேகம் காட்டி வருவது மற்ற கட்சிகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களது பலமான வேட்பாளர்களை முன்னிறுத்தி, அதிமுகவின் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என பாரிவேந்தர் நம்பிக்கை தெரிவித்தார்.
