தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும் சஞ்சய் என்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். நடிகர் விஜயின் மகன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகும் நிலையில் அவருக்கு விஜய் வாழ்த்து சொல்லவில்லை. அதன் பிறகு சங்கீதா மற்றும் விஜய் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதற்கு இருவரது தரப்பிலிருந்து இதுவரை விளக்கமளிக்கப்படவில்லை. இருப்பினும் விஜய் மற்றும் சங்கீதா சேர்ந்து வாழ்ந்து வருவதாக தான் அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவருடைய மனைவி சங்கீதா மட்டும் திருமணத்தில் தனியாக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் தான் சங்கீதா மட்டும் தனியாக திருமண விழாவில் கலந்து கொண்டதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சிலர் விஜய் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால்தான் சங்கீதா மட்டும் தனியாக திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறி வருகிறார்கள். மேலும் இது குறித்து இருவரும் விளக்கமளித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.