
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு இரண்டு வாக்குறுதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாக்குறுதி திட்டத்தையும் செயல்படுத்த ரேஷன் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தற்போது ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ள நிலையில் இம்மாதம் இறுதிக்குள் முடிந்து மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.