இந்தியாவில் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பிஎப் கணக்கு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனால் ஏராளமான நன்மைகளும் கிடைக்கிறது. ஆனால் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது சில குழப்பங்கள் வருகிறது. அதாவது புதிதாக ஒரு நிறுவனத்திற்கு சென்றால் அங்கு ஊழியர்களுக்கு புதிதாக பிஎஃப் கணக்கு தொடங்கப்படும். உங்களின் பிஎஃப் நம்பர் ஒன்றுதான் என்றால் பி எஃப் கணக்கும் ஒன்றாகத்தான் இருக்கும் என பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அப்படி கிடையாது, புதிய நிறுவனம் புதிய கணக்கு தொடங்கினால் நீங்கள் பழைய கணக்குடன் இந்த கணக்கை இணைக்க வேண்டும். அப்போதுதான் உங்களுடைய அனைத்து பணமும் ஒரே கணக்கில் இருக்கும். உங்களிடம் எத்தனை பிஎப் கணக்குகள் உள்ளது, அதனை எப்படி ஆன்லைன் மூலம் இணைக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு முதலில் https://www.epfindia.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று Service பிரிவில் Employees என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக திறக்கும் பக்கத்தில் one employee – one EPF account என்ற ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுடைய UAN, கடவுச்சொல் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய பிஎஃப் கணக்கு விவரங்கள் அனைத்தும் காட்டப்படும். பிறகு பிஎப் கணக்கு எண்ணை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு பிஎப் கணக்க இணைப்பதற்கான விண்ணப்பம் நிறைவடைந்து விடும். இப்போது உங்களுடைய நிறுவனம் அதனை அங்கீகரித்த பிறகு இ பி எஃப் ஓ அலுவலகம் உங்களுடைய பழைய கணக்கை புதிய கணக்குடன் இணைத்து விடும்.