
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆணாதிக்க முறைக்கு எதிராக தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது இன்ஸ்டா பதிவில், இந்த நேரத்தில் நீங்கள் என்ன காரணத்தை கூற போகிறீர்கள்? அவள் மேல் தான் தவறு உள்ளது என்பீர்களா? Men will Be men அப்படிதானே?”என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.