கொரிய தீபகற்பத்தில் அமைந்திருக்கும் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே சுமுகமான நிலை இல்லை. இரண்டு நாடுகளும் எப்போதும் மோதலில் தான் இருக்கும். இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்க அரசு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் இரு நாடுகளும் இணைந்து அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும். இதற்காக அமெரிக்க வீரர்களும் தென்கொரியாவுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் இரண்டு நாடுகளைப் பிரிக்கும் எல்லைக்கோட்டில் அமைந்துள்ள பன்மூஞ்சம்  கிராமம் வழியாக வட கொரியாவிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் அவரை வடகொரியா ராணுவம் கைது செய்துவிட்டது. தற்போது அமெரிக்க ராணுவம் அந்த வீரரை மீட்கும் ஆலோசனையில் அமெரிக்க அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.