ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா கலிங்கா, இன்று சமூக ஊடகங்களில் “ஹரியான்வி பார்பி டால்” என்று பிரபலமாகியுள்ளார். அன்றாட வீட்டு வேலைகளை ரோபோ பாணியில் செய்து, பாரம்பரிய ஹரியான்வி உடையுடன் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். இந்த தனித்துவமான பாணி காரணமாக, அவரது வீடியோக்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக பார்பி பொம்மைகள் மேற்கத்திய ஆடைகளில் காணப்பட்டாலும், பூஜா கலிங்கா குர்தா, டாமன் போன்ற ஹரியானாவின் பாரம்பரிய உடையுடன் பார்பி பாணியில் நடிப்பது அனைவரையும் கவர்கிறது. “எங்கள் பாரம்பரிய உடைகள் அடையாளத்தை இழக்கக் கூடாது. இன்றைய தலைமுறையினர் அதை அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பார்பிக்கு ஹரியான்வி நிறம் கொடுத்தேன்” என அவர் பெருமிதம் கொள்கிறார்.
भिवानी की पूजा कलिंगा हरियाणवी परिधान और रोबोटिक स्टाइल में बार्बी डॉल का एक्ट करती हैं
◆ पूरे हरियाणा में उनके इस वक़्त चर्चे हैं
◆ वे रोबोटिक अंदाज में दैनिक जीवन के कार्य करती हैं #PoojaKalinga | Pooja Kalinga Robotic Barbie pic.twitter.com/IwS0snCB5X
— News24 (@news24tvchannel) August 17, 2025
“>
தொடக்கத்தில் கேமரா முன் வரத் தயங்கிய பூஜா, கணவரின் ஊக்கத்தால் தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார். இன்று அவர் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைப் பெற்றிருப்பதோடு, பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளார்.
“நான் ஒரு சாதாரண பெண் தான், ஆனால் பார்பியைப் போல ஒரு அடையாளம் உருவாக்க விரும்பினேன்” என்ற அவரது வார்த்தைகள், வைரலாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
