தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வருகிறார். அவர் தனது குழந்தையை இருக்கையில் அமர வைத்துவிட்டு அருகே நின்று அக்கம் பக்கம் சுற்றி பார்க்கிறார். பின்னர் குழந்தை கவனிக்காத நேரத்தில் இளம்பெண் அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் தனது தாய் இல்லாததை கவனித்த குழந்தை அங்கும் இங்கும் ஓடி தாயை தேடி அழுதது. உடனே அங்கிருந்தவர்கள் சுதாரித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் குழந்தையை மீட்டு தந்தையிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
#NalgondaBusStand #Hyderabad #BusStand #Child #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/STMh9GRnXJ
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 28, 2025
இதற்கிடையே இளம்பெண் தனது குழந்தையை விட்டு விட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் பைக்கில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இளம் பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலனுடன் சொல்வதற்காக இளம்பெண் குழந்தையை தவிக்க விட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
