மக்கள் நீதி மய்யம், ஓபிஎஸ் அணி மற்றும் காங்கிரசை சேர்ந்த பலர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மநீம ஐடி விங்க் முக்கிய நிர்வாகிகள், பெரம்பூர் பகுதி செயலாளர், மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர், காங்கிரஸ் கட்சியின் தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் P.S.M.காஜாமைதீன், காங்கிரஸ் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் விமல், ஓபிஎஸ் அணி நெல்லை மாவட்ட செயலாளர் மகன் V.K.P. சங்கர் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.