இபிஎஃப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 12% ஒரு நிலையான தொகையை இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமல்லாமல் அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இத்திட்டத்தில் 12% பங்களிப்பை செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33 சதவீத தொகை இபிஎஸ் திட்டத்துக்கும், 3.67 சதவீத தொகை ஊழியரின் இபிஎப் கணக்கிற்கும் செல்கிறது.

ஊழியர் எவ்வாறு பங்களிக்கிறாரோ அதேபோல் முதலாளி இபிஎஃப் திட்டத்தில் சமமான பங்களிப்புகளை வழங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அறங்காவலர் குழு, நிதியமைச்சகத்துடன் ஆலோசனை செய்தபின் இபிஎஃப் வட்டி விகிதங்களை தீர்மானிக்கிறது.

2022–23 நிதி ஆண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.15 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது பணியாளரின் இபிஎஃப் கணக்கில் முதலாளி மற்றும் பணியாளரின் மொத்த பங்களிப்பு ரூபாய்.15,670 ஆக இருக்கும். மாதந்தோறும் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் 8.15%/12 = 0.679% ஆக இருக்கும். மொத்தம் ஆக கணக்கிட்டால் மொத்த பங்களிப்பு ரூபாய்.15,670 ஆக இருக்கும்.