கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் அமல் அகமது என்ற 22 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக 17 வயது சிறுமியுடன் பேச தொடங்கினார். இருவரும் நாளடைவில் நெருக்கமாக மாறிய நிலையில் அந்த பெண்ணை அமல் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொடுத்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படி செல்லும்போது அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி வீடியோ பதிவு செய்து செல்போனில் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அமல் தன்னுடன் உடலுறவு வைக்க வேண்டும் எனவும் இல்லையெனில் நிர்வாண வீடியோக்களை வெளியில் விட்டு விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார்.

இதனால் சிறுமி பயத்தில் வாலிபர் அழைத்த இடங்களுக்கு எல்லாம் சென்ற நிலையில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு அவர் சிறுமியை அடித்து  துன்புறுத்திய நிலையில் தன்னுடைய நண்பனான பஷீர் என்பவரை வைத்தும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அவர்கள் இருவரும் சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்த நிலையில் கொடுமையை தாங்க முடியாமல் தன் பெற்றோரிடம் நடந்து விவரங்களை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் வாலிபர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.