கன்னட டிவிகளில் வெளியான காமெடி கலாட்டா என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் சஞ்சு பசய்யா. இவரது மனைவி பல்லவி. இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்துவரும் நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை பல்லவிக்கு ஒரு வாலிபர் ஆபாச குறுந் தகவல்கள் அனுப்பியுள்ளார். அதாவது மனோஜ் என்ற வாலிபர் பல்லவிக்கு ஆபாச மெசேஜ், போட்டோக்கள் அனுப்பிய நிலையில் இது பற்றி அவர் தன் கணவனிடம் கூறிய நிலையில் அவர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்த நிலையில் பின்னர் நடிகர் சஞ்சு தானாகவே காவல் நிலையத்திற்கு சென்று வாலிபர் மீதான புகாரை வாபஸ் பெற்றதோடு பின்னர் இப்படி ஆபாச மெசேஜ் மற்றும் குறுந்தகவல் அனுப்பக்கூடாது என அந்த வாலிபருக்கு அட்வைஸ் கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட பலரும் நடிகர் சஞ்சுவை பாராட்டி வருகிறார்கள்.