வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது