இன்று பெரியாரை சொல்வர்களுக்கு நாளை அம்பேத்கரை சொல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

நேற்று திண்டிவனம் அருகே மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் படத்திறப்பு விழாவிற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கு பெற்றார். அப்போது பேசிய அவர், பெரியார் இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று யார்  முயற்சித்தார்கள் என்பதை நாமும் அறிவோம். அந்த கும்பல் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் விழுந்தார்களே தவிர பெரியாரை வீழ்த்தவே அவர்களால் முடியவில்லை.

திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி கிடையாது. பெரியாரை  விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது .பெரியாரை அந்நியர் என்று சொல்பவர்கள் அம்பேத்கரை சொல்வதற்கும் எவ்வளவு நேரம் ஆகும்? பெரியாரை தமிழர் அல்ல தமிழ் தேசியத்தின் பகைவர் என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் அனுமதித்தால் அம்பேத்கரை மராட்டியர் என்று சொல்லிக் கூட அநியாயப்படுத்துவார்கள். அவருக்கும், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? என்று கூட கேட்பார்கள் “என்று பேசி உள்ளார்.