இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில் தற்போது குழந்தை உரிமைகள் குறித்த புகார்களை பதிவு செய்வதற்கு whatsapp ஷாட் போட் ஒன்றை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.

அதாவது புதிய வாட்ஸ் அப் சாட் போட் குழந்தை உரிமைகள் தொடர்பான புகார் பதிவு மற்றும் தகவலை தேடுதல், புகார் நிலையை கண்காணிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. பொதுமக்கள் மற்றும் கமிஷன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள பாலமாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனை இன்று பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லி துணை முதல்வர் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.