பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றார்.

இன்றைய தினம் மத்திய பொது பட்ஜெட் என்பது தாக்கல் செய்யப்படுகிறது. குறிப்பாக மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்கின்ற கடைசி பட்ஜெட்டாகஇன்றிய பட்ஜெட் அமைந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை நடப்பு கூட்டத்தொடரிலே பல்வேறு விதமான பிரச்சினைகளை எழுப்ப அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள், திட்டமிட்டு இருக்கிறார்கள்.

குறிப்பாக bbc ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதேபோல அதானி குழுமம் செய்திருக்கக்கூடிய முறைகேடு தொடர்பாக பின்னர் ஹண்டர்பெர்க்  வழங்கிருக்கக் கூடிய ஆய்வறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப  இருக்கிறார்கள்.

இது தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில ஆளுநர்கள்  தலையீடு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களையும் எதிர்கட்சிகள் இந்த கூட்டத்தொடரில் எழுப்பலாம். நடப்பு கூட்டத்தொடர்  என்பது மொத்தம் இரண்டு பாகங்களாக நடைபெறும்.

பொதுவாக பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பாகம் நேற்றிலிந்து பிப்ரவரி 14ஆம் தேதி வரைக்கும் நடைபெறும். இரண்டாம் பாகம் மார்ச் 13ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும். முதல் பாகத்தை பொறுத்தவரை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம். அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தினுடைய ஒப்புதல் கிடைக்கப்பெறும்.அப்படி ஒப்புதல் கிடைத்தால் தான் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து அரசு செலவினங்களுக்கு கஜானாவில் இருந்து பணத்தை எடுக்க முடியும். எனவே முதல் பாகத்தை பொருத்தவரை இரண்டு விஷயங்களுக்கு மட்டும் தான் மிக முக்கியத்துவம் என்பது கொடுக்கப்படும்.