தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.

மெஜாரிட்டி இல்லாத இக்கட்டான சூழலில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் தொடக்கத்திலேயே ஆதரவளித்த நிலையில், கடைசி நிமிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வழங்கிய ஆதரவு விஜய்யின் முதலமைச்சர் கனவை நனவாக்கியுள்ளது. மெஜாரிட்டிக்குத் தேவையான பலம் கிடைத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் விஜய் பதவியேற்கவுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

“தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு விசிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்” என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். தோழமைக் கட்சிகளின் இந்த மெகா கூட்டணியால் கோட்டையில் இன்று “தளபதி” சகாப்தம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

“>