இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. https://neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் இளைநிலை நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 6ல் தொடங்கிய விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டது. நள்ளிரவு 11.30 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம், 11.59 மணிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.