சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக ராக் ஆன் ஹாரிஸ் 2.0 என்ற தலைப்பில் இசை கச்சேரி பிப்ரவரி 3ஆம் தேதி இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ நிறுவனம் கட்டணமில்லா பயணத்தை வழங்க உள்ளது. இதன் மூலமாக இசை கச்சேரிக்கு வருபவர்களுக்கு தனிப்பட்ட மெட்ரோ சீட்டுகளை கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்குகிறது.

இதன் மூலம் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் மெட்ரோ ரயில் மூலமாக தங்களுடைய இருப்பிடத்திற்கு திரும்பலாம். இந்த பயணச்சீட்டை ஒரு சுற்றுப்பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பச்சை வடித்தளத்தில் பயணிக்கும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூரில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.