சென்னை கீழ்ப்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கும் பணி இன்னும் நான்கு மாதங்களில் தொடங்கி ஓராண்டுக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை எடுத்த கீழம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது.

தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த கீழம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கேளம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் 20 கோடி செலவில் கேளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.