அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய நிலையில், இணையதளம் முடங்கியது..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான பணி நியமனம் செய்வதற்காக விண்ணப்பம் செய்யலாம் என்று போக்குவரத்து துறை அறிவிப்பு செய்திருந்தது. இதற்காக www.arasubus.tn.gov.in  என்ற இணையதளத்தை வெளியிட்டிருந்தார்கள்.. அதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று வெளியிட்டிருந்தனர். அதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்ப பதிவு மதியம் ஒரு மணி அளவில் தொடங்கிய நிலையில், இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கு தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 60,000-க்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்தியிருக்கக்கூடிய காரணத்தால் இணையதளம் முடங்கி இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் செப்டம்பர் 18ஆம் தேதி வரை 685 பணியிடங்களுக்கான ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகளுக்காக விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 60,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்ததன் காரணமாகவே இணையதளம் முடங்கியுள்ளது.. அதை சரி செய்வதற்கான பணியை தொழில்நுட்ப அலுவலர்கள் மேற்கொண்டுள்ளதாக  போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே 2 மணி நேரத்திற்கு உள்ளாகவே தொழில்நுட்ப அலுவலர்கள் மூலம் இணையதளம் சரியாக இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் நாள் என்பதால் இந்த சிரமத்தை சந்திப்பதாகவும், படிப்படியாக  சரி செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்கும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த பணிக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் இருப்பதால் அதை திட்டமிட்டு செய்யலாம் என்றும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.