செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், போன வருடமும் மிக பிரம்மாண்டமாக இந்திய நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் கூட நேரு யுவகேந்திரா மத்திய அரசினுடைய இளைஞர் மேம்பாட்டு துறையின் கீழாக இருக்கும் நேரு யுவகேந்திரா சார்பாக பல்வேறு இடங்களில் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த இடங்கள்,

– அதேபோல நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள்,  காவல்துறையை சார்ந்தவர்கள், அவர்கள் பிறந்த முக்கியமான இடங்களில் எல்லாம் மண் சேகரித்து, அதற்கு பின்பாக டெல்லியிலே இந்த மாத இறுதியிலே அவர்களுடைய நினைவாக அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டு,  அந்தப் போர் நினைவுச் சின்னத்தின் ஒரு பகுதியாக இந்த வருடம் நாம சுதந்திர தினத்தோடு சேர்க்கப்படுகின்ற இத்தனை மண் கலசங்களும் மரக்கன்றுகளும் அங்கு நடப்படும்.

அரசாங்கத்தின் சார்பாக நடைபெறக்கூடிய இந்த விழாவிலே சமுதாயத்தை சார்ந்த அத்தனை மக்களும் ஆர்வத்துடன் பங்கு பெற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இங்கேயும் கூட கடந்த முறை எல்லா இடங்களிலும் தேசிய கொடியை வழங்கி ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். இந்த வருடமும் கூட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் தேசிய கொடியை நாங்கள் வழங்கியுள்ளோம் என தெரிவித்தார்.