அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான போர் குறித்து அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னும் 2 முதல் 3 வாரங்களில் ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ள அவர், இதற்கு எந்தவிதமான சமாதான ஒப்பந்தமும் தேவையில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானால் அணு ஆயுதங்களை இனி வேகமாக உருவாக்கவே முடியாத அளவுக்கு, அந்த நாட்டை ‘கற்காலத்திற்கு’ பின்தள்ளிவிட்ட பிறகே அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை முழுமையாகச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்பதை டிரம்பின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் போர் குறித்த மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை இன்று இரவு 9 மணிக்கு டிரம்ப் வெளியிட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தையும், அதே சமயம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
