இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.அதன்படி ஒரு வாடிக்கையாளர் தங்களுடைய ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் இருக்கும் விவரங்கள் வங்கிகளில் சமர்ப்பித்த கேஒய்சி விபரங்களுடன் ஒத்து இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் புதிய KYC செயல்முறை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று புதுப்பிக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் தற்போது RBI வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து KYC விவரங்களை புதுப்பிக்க வற்புறுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய KYC விவரங்களில் மாற்றங்கள் ஏதும் இல்லாவிட்டால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சுய அறிக்கையை சமர்ப்பித்தால் போதுமானது. வங்கிக்கு நேரடியாக வர வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தியுள்ளது.