அரசு வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப்  பரோடா வாங்கி நாடு முழுவதும் உள்ள 6000 மேற்பட்ட ஏடிஎம்களில் யுபிஐ ஏடிஎம் வசதியை தொடங்கியுள்ளது. யுபிஐ ஏடிஎம்களின் இந்த அம்சமானது இந்தியாவின் எதிர்கால தொழில் துறையில் பிரகாசமான ஒரு தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த வசதியை தொடங்கிய இந்தியாவின் முதல் அரசு வங்கி என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த வசதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு இல்லாமலேயே UPI  மூலமாக ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

இதில் முக்கிய நன்மை என்னவென்றால் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட பல கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியும். யுபிஐ ஏடிஎம் என்பது வழக்கமான ஏடிஎம் தான். ஆனால் இதில் பணம் எடுக்க டெபிட் கார்டு தேவை கிடையாது. இது ஒயிட் லெவல் ஏடிஎம் என்றும் அழைக்கப்படுகிறது.