ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஏழு நகரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது திருப்பதியும் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றம் செய்யப்படவுள்ளது. திருப்பதி ஸ்மார்ட் சிட்டி கார்ப்பரேஷன் இந்தியாவுடன் இணைந்து இந்த  திட்டத்தை மேற்கொள்கிறது .திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

அதிக மக்கள் வந்து செல்லும் இந்த நகரத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் மேம்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு நகர செயல்பாட்டு மையத்தை நிறுவி திருப்பதியில் பல்வேறு தகவல் மற்றும் தொழில் தொடர்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த திட்டத்தின் முதன்மை இலக்கு நகர நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மேம்பட்ட சேவைகளை வழங்குவது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.