G 20 இரண்டு நாள் மாநாட்டில் முதல் நாளிலேயே கூட்டறிக்கை வெளியிடுவது என்பது குறித்து கருத்து ஒற்றுமை ஏற்பட்டிருக்கிறது. பல மாதங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்  நடந்து வந்த நிலையிலையே கூட்டறிக்கை வெளியிடப்படுமா ? அப்படி கூட்டறிக்கை  வெளியிடப்பட்டால் ? அதை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்வார்களா ? என்று பல்வேறு விதமான சந்தேகங்கள் இருந்தன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் பல்வேறு நாடுகளின் தூதர்கள்  மற்றும் அமைச்சர்களுடன் இது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அறிக்கையின் ஒவ்வொரு பத்தியும்,  அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அனைவரும் அதை ஒத்துக் கொண்டால் மட்டுமே அது ஒருமனதாக  நிறைவேற்றப்படுகிறது என அறிவித்து,  அதை வெளியிட முடியும்.

அந்த காரியம் தற்பொழுது இந்தியாவிற்கு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. G 20யின் தற்போதைய தலைவர்  என்கின்ற முறையிலே பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, முடிவு செய்யப்பட்டுள்ளது என அறிவித்திருக்கிறார். ஆகவே இந்த அறிக்கையை விரைவிலேயே வெளியிடப்படும் அதன் விவரங்கள் என்ன என்பதெல்லாம் விரைவில் தெரியவரும்.

குறிப்பாக உக்கரைன் போரை பேச்சுவார்த்தையின் மூலம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பிரச்சனைகளுக்கெல்லாம் பேச்சுவார்த்தை தான் தீர்வாக இருக்கும் என இந்தியா ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இதில்கருத்தொற்றுமை இல்லாத சூழல் இருந்தது.  ரஷ்யாவில் நிலைப்பாடு வேறாக இருந்தது. சீனாவின் நிலைப்பாடு வேறாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் அமெரிக்காவின் தோழமை நாடுகளில் கருத்துக்கள் வேறாக இருந்தனர். இப்படி நேர் எதிர் கருத்துக்கள் இருந்த நிலையில் புது டெல்லியில் ஜி 20 மாநாடு நடைபெற்ற கருத்துக்கள் இருந்த நிலையில் புதுடெல்லியில் ஜி 20 மாநாடுகள் நடைபெற்ற பிறகும் இறுதியாக அறிக்கை வெளியிடப்படாது. அப்படி அறிவிக்கை  வெளியிடப்பட்டாலும் அது ஒரு மனதாக நிறைவேற்றபடாது என  பலரும் சொல்லி வந்தார்கள். அப்படிபட்ட சூழ்நிலையில்

இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக தற்போது ஜி 20 அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இதன் விவரங்கள் விரைவிலே வெளியிடப்படும். இன்று காலையிலேயே ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி-20 யின் உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டதையும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.ஆகவே இந்தியாவை பொறுத்தவரை மிகவும் வெற்றிகரமாக இந்த ஜி-20 மாநாடு தொடங்கி இருக்கிறது. இதுவரை மிகவும்வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தூதரக அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது.