நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வகையான பாடத்திட்டத்தை மாணவர்கள் அனைவரும் பயிலும் விதமாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ எனும் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலமாக பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் பயிற்று மொழியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தேசிய கல்விக் கொள்கையின் படி தாய் மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இனி வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய் மொழிகளில் அதாவது தமிழ் மொழி உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆரம்ப வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில் தமிழக சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படும். அதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளார்.