மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மஜி கன்யா பாக்யஸ்ரீ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறக்கும் பொழுது பெற்றோருக்கு 50,000 ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி காப்பீடும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் கல்வியை அரசை கவனித்துக் கொள்கிறது. பயனாளிகளில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகளை கொண்ட குடும்பங்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், இரண்டு பெண் குழந்தை கொண்ட பெற்றோருக்கு ஒவ்வொரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மூன்றாவது பெண் குழந்தைக்கு நிதி உதவி கிடையாது .

தாய் மற்றும் மகள் பெயரில் வங்கி கணக்கில் கூட்டு கணக்கு தொடங்கப்பட்டு ஒரு லட்சம் விபத்து காப்பீடு மற்றும் 5000 காசோலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்கு பெற்றோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, பெண் குழந்தை அல்லது தாயின் வங்கி கணக்கு பாஸ்புக், செல்போன் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி சான்று, வருமான சான்று போன்ற அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.