மத்திய அரசானது  மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்திலும், அவர்களுடைய டிஜிட்டல் கொடுப்பனைவுகளை அதிகரிப்பதற்கும் வங்கி உத்திகளை வகுத்து முயற்சிகளை முடுக்கி  விட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சக சேவைகள் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி பிரதமரின் ஸ்வநிதி திட்டம் மூலமாக தெருவோர வியாபாரிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக மலிவு விலையில் கடன் மற்றும் அவர்களுடைய டிஜிட்டல் உள் நுழைவு ஆகியவற்றின் மூலமாக அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அம்சங்கள் குறித்து தெருவோர வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில்  செயல்திறன் அடிப்படையில் தெருவோர வியாபாரிகளை கௌரவிக்கவும், பட்டறைகள், நிதி கல்வியறிவு திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.