இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே மத்திய அரசே சில வருடங்களுக்கு முன்பு பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று புதிய ரூபாய் நோட்டுகளை அறிவித்தது. ஆனால் அந்த நோட்டுக்களை கண்டுபிடிப்பதில் பார்வையற்றவர்கள் சிரமம் அடைவதால் அவர்களுக்கு வசதியாக புதிய நோட்டுக்களை அச்சிட வேண்டும் என்று பார்வையற்றோர் சங்கம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில் புதிய ரூபாய் நோட்டுகள் கவனமாக பரிசீலிக்கப்பட்ட தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தற்போது பழைய மதிப்பிலான நோட்டுகள் வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டு வருகிறது. அதனால் இந்த நேரத்தில் புதிய நோட்டுகள் வந்தால் குழப்பம் ஏற்படும் என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது. ஏற்கனவே கடந்த ஆண்டு பழைய மற்றும் கிழிந்த நோட்டுக்களை மீண்டும் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடுவதற்கு 4628 கோடி செலவானது. இந்த நேரத்தில் புதிய நோட்டுக்களை அறிமுகம் செய்தால் செலவு அதிகமாக ஏற்படும் எனவும் அதனால் மீண்டும் புதிய நோட்டுகள் அச்சிடும்போது பார்வையற்றவர்களுக்காக தேசிய அளவில் இயங்கி வரும் அமைப்புகளில் ஆலோசனையை பெறுவதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.