நாடு முழுவதும் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்திக்கு அடுத்தபடியாக தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பன்மொழிக் கல்வியை போக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து CBSE பள்ளிகளிலும்  மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்சி மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று   சிபிஎஸ்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இனி தங்கள் தாய் மொழியிலேயே மேல்நிலை கல்வி வரை பயிலலாம் என்ற அறிவிப்பை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.